தமிழகத்தின் காபி உற்பத்தி முதல் சத் பண்டிகை வரை; மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பேசியது என்ன?
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் சத் பண்டிகைக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இப்பண்டிகை, நாட்டின் ஒவ்வொரு பிரிவினரையும் ஒன்றிணைக்கும் பண்பாடு, இயற்கை மற்றும் சமூகத்தின் ஆழமான ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு அழகான எடுத்துக்காட்டு என்று அவர் விவரித்தார். தனது உரையில், பிரதமர் பல தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை குறிப்பிட்டுப் பேசினார். முதலில், ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தில் வெற்றி பெற்ற ஆயுதப் படைகளின் பாராட்டுகளுடனும், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் அரசின் சாதனைகளுடனும் தொடங்கினார். ஒரு காலத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தின் இருள் சூழ்ந்திருந்த பகுதிகளிலும் இப்போது மகிழ்ச்சி விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
மர வளர்ப்பு
தாய் பெயரில் ஒரு மரம்
பிரதமர் மோடி 'ஏக் பேட் மா கே நாம்' ('தாய் பெயரில் ஒரு மரம்') என்ற முயற்சியில் பங்கேற்க குடிமக்களை வலியுறுத்தினார். மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் ஒரு மரத்தை நட வேண்டும் என்று ஊக்குவித்தார். பழங்கால வேத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மரங்கள் அனைத்து உயிரினங்களுக்கும் காலம் கடந்த பயனை அளிப்பதை அவர் வலியுறுத்தினார். வரவிருக்கும் அக்டோபர் 31 அன்று சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரை நவீன காலத்தின் தேசத்தின் மிகச்சிறந்த ஒளிவிளக்குகளில் ஒருவர் என்று புகழ்ந்து அஞ்சலி செலுத்தினார். நல்லாட்சி மற்றும் தூய்மைக்கு முன்னுரிமை அளித்த படேலின், இந்தியாவை ஒன்றிணைப்பதற்கான இணையற்ற முயற்சிகளை மோடி பாராட்டினார்.
காபி
இந்தியாவின் காபி உற்பத்தி
பக்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய தேசிய கீதமான வந்தே மாதரத்தைப் பிரதமர் மோடி கௌரவித்தார். நவம்பர் 7 அன்று வந்தே மாதரம் கொண்டாட்டத்தின் 150வது ஆண்டில் இந்தியா அடியெடுத்து வைக்கிறது என்பதைக் குறிப்பிட்டார். பழங்குடியின சமூகத்தின் தலைவரான பிர்சா முண்டாவுக்கு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினார். அவரது பிறந்தநாள் நவம்பர் 15 அன்று ஜனஜாதீய கௌரவ் திவாஸாக கொண்டாடப்படுகிறது. கூடுதலாக, ஒடிசாவின் கோராபுட் காபி குறித்து தனக்கு வந்த கடிதத்தை சுட்டிக்காட்டி, இந்தியாவின் காபி உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ளதாகக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் உள்ளிட்ட அதிகம் காபி விளையக் கூடிய பகுதிகளையும் மோடி தனது உரையில் குறிப்பிட்டு பாராட்டினார்.