Page Loader
ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலம் எப்போது திறக்கப்படும்? புதிய பெயர் என்ன?
புதிய பாலத்தை பிரதமர் மோடி நவம்பர் 20ஆம் தேதி திறக்க திட்டம்

ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய பாலம் எப்போது திறக்கப்படும்? புதிய பெயர் என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 06, 2024
09:28 am

செய்தி முன்னோட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் கடலின் மேல் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. ரூ.550 கோடியில் புதிய இரட்டை வழி மின்சார ரயில் பாலம் கடந்த 5 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்தது. இந்த புதிய பாலம் தற்போது பணிகள் முடிந்த நிலையில், பல்வேறு கட்ட ஆய்வு பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த புதிய பாலத்தை பிரதமர் மோடி நவம்பர் 20ஆம் தேதி திறக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் 2 நாட்கள் முன்பு தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த புதிய பாலத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பெயரை சூட்ட வேண்டி பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், இந்த பாலத்திற்கு 'கலாம் சேது' என பெயர் சூட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post