
தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு 'நமோ செயலி' மூலம் உரையாடுகிறார் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு 'நமோ செயலி' மூலம் உரையாட போவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
"இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி ஆப் வாயிலாக எங்களின் கடின உழைப்பாளிகளாக விளங்கும் தமிழக பாஜக தொண்டர்களுடனான 'எனது பூத் வலிமையான பூத்' உரையாடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள நமது தொண்டர்கள் நமது கட்சியின் நல்லாட்சி குறித்து மாநிலம் முழுவதும் திறம்பட பரப்பப்படுவதை உறுதி செய்வதும் மக்கள் மத்தியில் பணியாற்றுவதும் பாராட்டுக்குரியது. தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழகம் விரக்தியடைந்து எங்கள் கட்சியை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை." என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
'நமோ செயலி' மூலம் உரையாடுகிறார் பிரதமர் மோடி
#JUSITN தமிழ்நாடு பாஜக தொண்டர்களுடன்
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 29, 2024
இன்று மாலை 5 மணிக்கு ‘நமோ செயலி' மூலம்
உரையாடுகிறார் பிரதமர் மோடி #PMModi #BJP #Tamilnadu #ParliamentElection2024 #news18tamilnadu | https://t.co/7dpn9FCtgj pic.twitter.com/1K62aEHzmb