விமானம் போன்ற வசதிகள்.. படுத்துக்கொண்டே பயணம்; நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
இந்திய ரயில்வே துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், நாட்டின் முதலாவது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜனவரி 17) மேற்கு வங்கத்தின் மால்டா நகரத்தில் தொடங்கி வைத்தார். இதுவரை பகல்நேரப் பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வந்தே பாரத் ரயில்கள், இனி நீண்ட தூர இரவு நேரப் பயணங்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Guwahati (Kamakhya) 🔁 Howrah
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) January 17, 2026
🚄 First Vande Bharat Sleeper…
On track with PM @narendramodi Ji’s Purvodaya vision. pic.twitter.com/0xmJDjveVp
வழித்தடம்
ஹவுரா - கௌஹாத்தி வழித்தடம்
இந்த முதல் ஸ்லீப்பர் ரயில் மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் அசாமின் கவுஹாத்தி இடையே இயக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் பயண நேரத்தைச் சுமார் 2.5 மணிநேரம் வரை இந்த ரயில் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையாகக் குளிரூட்டப்பட்ட இந்த ஸ்லீப்பர் ரயில், விமானத்தில் பயணம் செய்வது போன்ற அதிநவீன வசதிகளைக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மால்டா
மால்டாவில் ரூ.3,250 கோடி மதிப்பிலான திட்டங்கள்
தனது இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி, மால்டாவில் ரூ.3,250 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் சிலிகுரி லோகோ ஷெட் மேம்பாடு, புதிய ரயில் பாதைகள் மற்றும் வந்தே பாரத் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் அடங்கும். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த நாகர்கோவில் மற்றும் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் புதிய அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் (Amrit Bharat Express) ரயில்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
அசாம்
அசாம் மற்றும் காசிரங்கா திட்டங்கள்
மேற்கு வங்கப் பயணத்தை முடித்துக் கொண்டு அசாம் செல்லும் பிரதமர், அங்கு புகழ்பெற்ற போடோ சமூகத்தின் கலாச்சார விழாவான பகுரும்பா தௌ 2026 (Bagurumba Dwhou 2026) நிகழ்வில் பங்கேற்கிறார். மேலும், காசிரங்கா தேசியப் பூங்கா வழியாகச் செல்லும் ரூ.6,950 கோடி மதிப்பிலான மேம்படுத்தப்பட்ட உயர்மட்ட சாலைத் திட்டத்திற்கும் அவர் பூமி பூஜை செய்ய உள்ளார். இது அப்பகுதியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதோடு, போக்குவரத்தையும் எளிதாக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.