LOADING...
வரலாற்றுச் சிறப்புமிக்க ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென்னாபிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி
ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென்னாபிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜி20 மாநாட்டில் பங்கேற்க தென்னாபிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 21, 2025
11:28 am

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணத்தை இன்று தொடங்கினார். "வசுதைவ குடும்பகம்" (Vasudhaiva Kutumbakam) மற்றும் "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" (One earth, One Family and One future) என்ற இந்தியாவின் பார்வைக்கு இணங்க, உச்சி மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைப்பேன் என்று புறப்படுவதற்கு முன் பிரதமர் மோடி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

சிறப்பு அம்சங்கள்

G20 மாநாட்டின் சிறப்பு அம்சங்கள்

ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடைபெறும் முதலாவது ஜி20 உச்சி மாநாடு இதுவாகும். பிரதமர் மோடி தனது பதவி காலத்தில் பங்கேற்கும் 20வது ஜி20 நிகழ்வு இது. இதன் மூலம், உலகின் முக்கியத் தலைவர்கள் மத்தியில் அவர் தொடர்ந்து இந்த மாநாடுகளில் பங்கேற்கும் சாதனையைப் படைத்துள்ளார். ஜி20 மாநாட்டிற்கு முன்னதாக, தென் ஆப்பிரிக்கா தலைமையில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பின் மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ஜி20 மாநாட்டில், அவர் சர்வதேசத் தலைவர்களைச் சந்தித்து உலகளாவிய, இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச உள்ளார். இந்த மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.