LOADING...
டொனால்ட் டிரம்புடன் இருதரப்பு உறவுகள் மற்றும் உலக அமைதி குறித்து பிரதமர் மோடி ஆலோசனை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி ஆலோசனை

டொனால்ட் டிரம்புடன் இருதரப்பு உறவுகள் மற்றும் உலக அமைதி குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

எழுதியவர் Sekar Chinnappan
Dec 11, 2025
07:54 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன் இன்று (டிசம்பர் 11) தொலைபேசியில் உரையாடினார். இந்தப் பேச்சு மிகவும் அன்பானதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருந்ததாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இரு தலைவர்களும் விவாதித்த முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இருவரும் ஆய்வு செய்தனர். தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச நிலவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்காக இந்தியா மற்றும் அமெரிக்கா தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்றும் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement