வெனிசுலாவில் நிலநடுக்கக் கொடூரம்: 32 பேர் பலி.. 700 பேர் காயம்! மீட்புப் படையை அனுப்பத் தயாராகும் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
வெனிசுலா நாட்டில் அடுத்தடுத்து தாக்கிய இரட்டை நிலநடுக்கங்களால் பேரழிவை சந்தித்துள்ள அந்நாட்டு அரசுக்கும் மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான பேரிடர் காலத்தில் வெனிசுலா நாட்டுக்குத் தேவையான அனைத்து விதமான அவசர மற்றும் மருத்துவ உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
பிரதமர் மோடி
எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட உருக்கமான செய்தி
வெனிசுலாவின் நிலநடுக்கப் பாதிப்புகள் குறித்துப் பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வெனிசுலாவில் கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்டுள்ள பேரழிவைக் கண்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்திய மக்களின் சார்பில், வெனிசுலா அரசுக்கும், மக்களுக்கும், குறிப்பாகத் தங்களது அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகக் கூறிய அவர், இந்தத் துயரமான நேரத்தில் இந்தியா வெனிசுலாவுடன் உறுதியுடன் துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Deeply saddened by the devastation caused by the severe earthquakes in Venezuela.
— Narendra Modi (@narendramodi) June 25, 2026
On behalf of the people of India, I extend our heartfelt condolences to the Government and people of Venezuela, especially to the families who have lost their loved ones. We pray for the speedy…
32 உயிரிழப்புகள்
அவசர நிலையைப் பிரகடனப்படுத்திய இடைக்கால அதிபர்
வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் வியாழக்கிழமை அதிகாலை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், முதற்கட்டமாக 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். நிலநடுக்கத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள, தலைநகர் கரகஸுக்கு வடக்கே அமைந்துள்ள லா குவைரா பகுதியைத் துயர மண்டலமாக அறிவித்துள்ள அவர், நாட்டின் ஒட்டுமொத்தப் பகுதிகளுக்கும் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
முடங்கிய உள்கட்டமைப்பு
இடிபாடுகளில் தொடரும் தேடுதல் வேட்டை
ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 என அடுத்தடுத்த சில நொடிகளில் தாக்கிய இந்த நிலநடுக்கங்களால் டஜன் கணக்கான பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன. கரகஸ் அருகே உள்ள சைமன் பொலிவார் சர்வதேச விமான நிலையம் கடுமையான சேதங்களால் மூடப்பட்டுள்ளது. மேலும், தலைநகரில் நிலத்தடி மெட்ரோ சேவைகள் மற்றும் இயற்கை எரிவாயு குழாய் விநியோகங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் இடிந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.