
பிரதமருக்கான மருத்துவ செலவுகள் அரசாங்க பணத்தில் இருந்து செலவிடப்படவில்லை: RTI
செய்தி முன்னோட்டம்
பிரதமருக்கான மருத்துவ செலவுகள் அரசாங்க பணத்தில் இருந்து செலவிடப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிவந்துள்ளது.
புனேவைச் சேர்ந்த பிரஃபுல் சர்தா ஒரு சமூக ஆர்வலர் ஆவார். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பிரதமர் அலுவலகத்திடம் இது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளித்த பிரதமர் அலுவலகம், பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து அவரது மருத்துவ செலவுகளுக்காக ஒரு ரூபாய் கூட அரசாங்க கருவூலத்தில் இருந்து செலவிடப்படவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
தகவல் மையம்
பிரதமர் அலுவலகம் அளித்த பதில்
RTI மூலம் வெளிவந்த தகவல், "இந்த அலுவலகத்தில் உள்ள பதிவுகளின்படி, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தனிப்பட்ட மருத்துவச் சிகிச்சைக்கு எந்தச் செலவும் செய்யப்படவில்லை" என்று கூறி இருக்கிறது.
மேலும், "2014ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் எந்தச் செலவும் செய்யப்படவில்லை." என்று பிரதமர் அலுவலகம் தெளிவுபடுத்தி இருக்கிறது.
இந்த தகவலைப் பெற்ற சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா,
"வரி செலுத்துவோரின் பணம் பிரதமர் அலுவலகத்தின் தனிப்பட்ட பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. இது ஆட்சியின் மீது எங்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது. MP-க்கள் மற்றும் MLA-க்களும் தங்கள் தனிப்பட்ட மருத்துவச் செலவுகள் ஏதேனும் இருந்தால் அதைத் தாங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்று கூறி இருக்கிறார்.