PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்!
செய்தி முன்னோட்டம்
2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் PM கேர்ஸ் நலத்திட்டத்திற்கு நிதி அளிக்கப்பட்டுள்ளதாக நியூஸ் 18 செய்தி நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த நலத்திட்டத்தின் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையை மதிப்பாய்வு செய்து அவர்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர்.
வெளியிடப்பட்ட செய்தியின் முக்கிய புள்ளிகள்:
இந்த நிதியில் 60% கொரோனா மீட்பிற்காகவும் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் செலவிடப்பட்டுள்ளது.
மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பது, அரசு மருத்துவமனைகளுக்கு வென்டிலேட்டர்களை வழங்குவது, தற்காலிக மருத்துவமனைகளை அமைப்பது போன்ற பல்வேறு கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்த 60% (கிட்டத்தட்ட 7,700 கோடி) செலவிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு நிதி வரத்து குறைந்துள்ளது.
நிதி பரிவர்த்தனை
நிதியின் வரவு செலவுகள்:
பெறப்பட்ட நிதியின் தகவல்கள்:
2020-21ஆம் நிதியாண்டில் ரூ.7,183 கோடி உள்நாட்டு நிதியும் ரூ.495 கோடி வெளிநாட்டு நிதியும் பெறப்பட்டுள்ளது.
2021-22ஆம் நிதியாண்டில் ரூ.1,897 கோடி உள்நாட்டு நிதியும் ரூ.41 கோடி வெளிநாட்டு நிதியும் பெறப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த PM கேர்ஸ் நலத்திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது, இதற்கான முதலாம் நிதியை(ரூ.2.25 லட்சம்) பிரதமர் நரேந்திர மோடி தனது தனிப்பட்ட வருவாயில் இருந்து வழங்கியுள்ளார்.
கொரோனாவுக்கு செலவழிக்கப்பட்ட நிதியின் தகவல்கள்(கோடிகளில்):
வென்டிலேட்டர்கள்- ரூ.1,311+ரூ.835( 2 ஆண்டுகள்)
ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயாரிப்பு-ரூ.1703
ஆக்சிஜன் செறிவூட்டிகள்-ரூ.500
SpO2 ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அமைப்புகள்-ரூ.322
மருத்துவனை கட்டிடங்கள்/மெத்தைகள்-ரூ.96
லீகுய்ட் ஆக்சிஜன் உபகரணங்கள்- ரூ.190
கோவிட் மருத்துவமனைப் புதுப்பித்தல்-ரூ.68
தடுப்பூசிகள்-ரூ.1,392
புலம்பெயர்ந்தவர்கள்/யூனியன் பிரதேசங்களின் நலனுக்காக-ரூ.1,000