Page Loader
அக்னிபாத் திட்டம் குறித்து பரவிய வாட்ஸ்அப் செய்தி போலியானது: PIB 

அக்னிபாத் திட்டம் குறித்து பரவிய வாட்ஸ்அப் செய்தி போலியானது: PIB 

எழுதியவர் Sindhuja SM
Jun 17, 2024
06:07 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா: சைனிக் சமன் திட்டம் என்ற பெயரில் மாற்றங்களுடன் மீண்டும் அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஒரு தவறான செய்தி வாட்ஸ்அப்பில் பரபரப்பப்பட்டதை அடுத்து, செய்தியாளர் தகவல் பணியகம்(PIB) அதற்கு விளக்கம் அளித்துள்ளது. வாட்ஸ்அப்பில் பரபரப்பப்பட்டு வரும் செய்தி போலியானது என்று PIB ஃபாக்ட் செக் கூறியுள்ளது. இந்திய அரசாங்கத்தால் அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் PIB தெரிவித்துள்ளது. புதிய சைனிக் சமன் திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட பணிக் காலம், அதிக வருமானம் மற்றும் அதிக பேருக்கு நிரந்தர வேலை வழங்கப்படுவதாக அந்த பொய் செய்தியில் கூறப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா 

அக்னிபாத் திட்டத்தின் விவரங்கள் 

குறுகிய கால அடிப்படையில் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் இந்திய ஆயுதப் படை பணியாளர்களின் வயது வரம்பை குறைப்பதே ஜூன் 14, 2022 அன்று தொடங்கப்பட்ட அக்னிபாத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் 17 அரை வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களை நான்கு வருட காலத்திற்கு வேலைக்கு சேர்த்துக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் சேரும் 25% நபர்களை கூடுதலாக 15 ஆண்டுகளுக்கு தக்கவைத்துக்கொள்ளளலாம். நிர்ணயிக்கப்பட்ட காலத்தை முடித்தவர்கள் நிறுவனத் தேவைகள் மற்றும் பிற கொள்கைகளின் அடிப்படையில் நிரந்தரப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மூன்று சேவைகளுக்குள் இளமையான வீரர்களை பேணுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரிய சீர்திருத்தம் திட்டம் இது என்று பேசப்படுகிறது.