பெரியார் அறிவுலக புத்தக ஊழல்: திமுகவின் கேள்விகளுக்கு தவெக அரசாணை ஆதாரத்துடன் பதிலடி
செய்தி முன்னோட்டம்
கோவை பெரியார் அறிவுலகத்தில் கொள்முதல் செய்யப்பட்ட போலி புத்தகங்கள் விவகாரத்தில், திமுக மற்றும் ஆளும் தமிழக வெற்றி கழகம் (தவெக) இடையே கடுமையான அறிக்கை போர் வெடித்துள்ளது. போலி பதிப்பகங்களின் நூல்களில் ஜூன் மாத முத்திரை இருப்பதை சுட்டிக்காட்டி திமுக கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், முந்தைய திமுக ஆட்சியிலேயே அதற்கான கொள்முதல் ஆணை வழங்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ ஆதாரத்தை வெளியிட்டுத் தவெக பதிலடி கொடுத்துள்ளது.
திமுக
"டம்மி முதலமைச்சர்... ஜூன் மாத முத்திரை ஏன்?": திமுகவின் அடுக்கடுக்கான கேள்விகள்
திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,"அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் ஆகிய போலிப் பதிப்பகங்களின் நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்ற முத்திரை இடம்பெற்றுள்ளது. ஆனால், 'வால்காவிலிருந்து கங்கை வரை' போன்ற பிற புகழ்பெற்ற பதிப்பக நூல்களில் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரை உள்ளது".
"திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் போன்ற பெயர்களில் அச்சிடப்பட்ட போலி நூல்கள் தவெக ஆட்சியில் யாருடைய முடிவால் வாங்கப்பட்டன? யாருக்குக் கமிஷன் சென்றது?"
"திமுக ஆட்சியில் வெளிப்படையாகவே நூல் கொள்முதல் நடைபெற்றது. தவெக ஆட்சியமைந்து 6 மாதங்களுக்குப் பிறகு ஒரு எழுத்தாளர் சுட்டிக்காட்டிய பின்னரே அரசுக்கு இந்த விவரம் தெரியவந்ததா? அல்லது எதுவும் தெரியாமலேயே முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளாரா?"
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிவுக்கு (அக்டோபர் 9) பிறகு தவெக தலைவர், டம்மி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வந்திருக்கும் பதிவு ‘அடடே இந்த பொம்மை பேசுமா?’ என ஆச்சரியமளிக்கிறது.
— DMK (@arivalayam) November 6, 2026
விலைவாசி உயர்வு குறித்து பதிவு இல்லை..கொலைகள் குறித்து கவலையில்லை…காணாமல்… pic.twitter.com/fPjLGlIpfJ
தவெக பதிலடி
"முகத்திரை நார்நாராகக் கிழியும்!": கொள்முதல் ஆணையை வெளியிட்டுத் தவெக பதிலடி
திமுகவின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தவெக சார்பில் ஆதாரத்துடன் உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
"மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே... இதோ அகல் விளக்குப் பதிப்பகத்திற்குத் தீயசக்தி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி: ந.க.எண்: 7781/எ1/2025, நாள்: 14/02/2026"
"அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பது போலப் பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்."
கடந்த திமுக ஆட்சியின் இறுதிப் பகுதியில், 2026 பிப்ரவரி 14 அன்றே அகல் விளக்கு பதிப்பகத்திற்குப் புத்தகக் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டதை இந்த அரசாணை எண் உறுதி செய்வதாகத் தவெக சுட்டிக்காட்டியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே...
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) November 6, 2026
இதோ அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு தீயசக்தி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி.
ந.க.எண் :7781/எ1/2025
நாள் : 14/02/2026
அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை… pic.twitter.com/k4YD43Az0L