Page Loader
10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்: பெரம்பலூர் மாவட்டம் சாதனை! 
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது.

10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்: பெரம்பலூர் மாவட்டம் சாதனை! 

எழுதியவர் Arul Jothe
May 19, 2023
12:30 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகள் படி, அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்களின் வரிசையில், முதல் இடத்தை பெரம்பலூர் மாவட்டம் கைப்பற்றி உள்ளது. ஊடக செய்திகளின்படி, அந்த மாவட்டத்தில் 91.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை நடைபெற்றது. அதில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இம்மாதம் 8ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது வெளியான 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் கடந்த ஆண்டை விட அதிக சதவிகித மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

10th Result 

பெரம்பலூர் மாவட்டம் அதிக தேர்ச்சி

இந்த கல்வியாண்டில், 3,718 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளன. மாணவர்கள் தங்களது ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதியை இணையதளங்களான http://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge ஆகியவற்றில் உள்ளிட்டு தங்களது மதிப்பெண்களை சிரமமின்றி பார்த்துக்கொள்ளலாம். மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமும் மதிப்பெண் விவரங்கள் அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திலும் முழு மதிப்பெண்களை அடைவது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டம் 97.67 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சிவகங்கை 97.53 சதவீதமும், விருதுநகர் 96.22 சதவீதமும் பெற்றுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம் வெறும் 83.54 சதவீத தேர்ச்சியுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.