நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே.பாண்டியன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரான வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தோல்வியடைந்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது பற்றி பாண்டியன் வெளியிட்ட ஒரு வீடியோ செய்தியில்,"அரசியலில் சேரும் நோக்கம் நவீனுக்கு உதவுவது மட்டுமே..இப்போது நனவுடன் தீவிர அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்." என தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 78 இடங்களில் வெற்றி பெற்று 24 ஆண்டுகால பிஜேடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
embed
வி.கே.பாண்டியன் வீடியோ
#WATCH | 5T Chairman & BJD leader VK Pandian says, "...Now consciously I decide to withdraw myself from active politics. I am sorry if I have hurt anyone on this journey. I am sorry if this campaign narrative against me has had a part to play in BJD's loss..." (Source: BJD) pic.twitter.com/Hf1stid8Gn— ANI (@ANI) June 9, 2024
காரணம்
பாண்டியன் மீதுள்ள 'வேற்று மாநிலத்தவர்' என்ற பிம்பம்
அறிக்கைகளின்படி, பிஜேடியின் தோல்விக்கான காரணங்களில் ஒன்று பாண்டியன் மீது வெளி மாநிலத்தவர் என்ற எதிர்ப்பு உணர்வு அதிகரித்து வருகிறது.
மேலும் அவர் பிஜேடி மற்றும் மாநிலத்தின் நிர்வாக இயந்திரத்திற்குள் மகத்தான அதிகாரத்தை செலுத்தினார் மற்றும் நடைமுறை ஆட்சியாளராக பரவலாகக் காணப்பட்டார் எனவும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு "வெளி ஆள்" ஒடிசாவின் அரசாங்கத்தை ஆள்வது என்பது, ஏற்கனவே முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாக பாண்டியனின் ஆதிக்கத்தைக் கண்டு அதிருப்தி அடைந்த ஒடியா மக்களுக்குப் பிடிக்கவில்லை.
வாரிசு யூகங்கள்
தன்னுடைய வாரிசு பாண்டியன் என்ற செய்தியை மறுத்த பட்நாயக்
ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் அடுத்த வாரிசு பாண்டியன் என்ற வதந்திகள் அதிகமாக பரவியது. இருப்பினும், பட்நாயக் அதனை மறுத்து, ஒடிசா மக்கள் தனது வாரிசை தீர்மானிப்பார்கள் என்று கூறினார்.
"அவர் கட்சியில் சேர்ந்தார், எந்தப் பதவியும் வகிக்கவில்லை. அவர் எந்தத் தொகுதியிலும் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது வாரிசு பற்றிக் கேட்டால் அது பாண்டியன் இல்லை என்று நான் எப்போதும் தெளிவாகச் சொல்லி வருகிறேன்" என்று பட்நாயக் கூறினார்.
மாநிலத்தில் சுகாதாரம், கல்வி, விளையாட்டு மற்றும் கோயில் திருப்பணித் திட்டங்களுக்கு பாண்டியனின் பங்களிப்பையும் அவர் எடுத்துரைத்தார்.