NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி
    திருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி
    இந்தியா

    திருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி

    எழுதியவர் Nivetha P
    September 03, 2023 | 04:41 pm 0 நிமிட வாசிப்பு
    திருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி
    திருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. இங்கு பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் கிரிவலம் செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் இங்கு அமைந்துள்ள கிரிவல பாதையிலும், ஆசிரமங்கள் உள்ள இடங்களிலும் ஏராளமான சாமியார்கள் நிரந்தரமாக தங்கியுள்ளனர். இவ்வாறு தங்கியுள்ள சாமியார்களுக்கு அங்குள்ள ஆசிரமங்கள், தன்னார்வலர்கள், ஆன்மீக அமைப்புகள் மூலம் அன்னதானம் அனுதினமும் வழங்கப்படுகிறது. அதேபோல் இவர்களது தேவைகள் அங்கு வரும் பக்தர்கள் மூலமும் பூர்த்தியடையும் பட்சத்தில் சாமியார்கள் இங்கு தங்க அதிக விருப்பம் கொள்கிறார்கள் என்று தெரிகிறது. இந்நிலையில், இங்குள்ள சில சாமியார்களுக்கு குற்ற பின்னணி இருக்கும் நிலையில், வெளியூரில் இருந்து வரும் சாமியார்கள் இடையே தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

    ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை

    அதேபோல் இங்குள்ள சில சாமியார்களுக்கு போதை பொருள் பழக்கம் இருப்பதால் கிரிவலம் செல்லும் பக்தர்களிடம் தகராறு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. இதனால் அங்கு தங்கியுள்ள சாமியார்களுக்கு முகவரி, புகைப்படம்,கைரேகை உள்ளிட்டவைகளை அடிப்படையாக கொண்டு ஏற்கனவே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கிறது. இதற்கிடையே தற்போது அவற்றை சரிபார்க்கும் பணியில் திருவண்ணாமலை மேற்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் ஆனந்தன், எஸ்ஐ.,சிவசங்கரன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சாமியார்களின் ஆவணங்களை சரிபார்த்து அவர்கள் இங்கு தங்கியுள்ள காரணம்? எவ்வளவு நாட்கள் தங்கியுள்ளனர்?போன்ற கேள்விகளையும் கேட்டு வருகின்றனர் என்று தெரிகிறது. நேற்று(செப்.,2) ஒரே நாளில் மட்டும் 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    திருவண்ணாமலை
    காவல்துறை
    காவல்துறை

    திருவண்ணாமலை

    கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - போலீஸ் பாதுகாப்புடன் சென்று வழிபாடு  போராட்டம்
    திருவண்ணாமலை கிரிவலம்: ஆகஸ்ட் 1ஆம் தேதி சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படும் தமிழ்நாடு
    ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்டதாக கூறிய விவகாரம் - ராணுவத்திற்கு அறிக்கை அனுப்பிய காவல்துறை  ஜம்மு காஷ்மீர்
    தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடை மாற்றம்  தமிழ்நாடு

    காவல்துறை

    பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது டெல்லி
    ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தான்
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்
    மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை காவல்துறை

    காவல்துறை

    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை  மதுரை
    நகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    பாஜக எம்பி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 10 வயது சிறுவனின் உடல்: ஒரு அதிர்ச்சி சம்பவம்  அசாம்
    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்  உத்தரப்பிரதேசம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023