நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 4 பேரின் போலீஸ் காவல் ஜனவரி 5ம் தேதி வரை நீட்டிப்பு
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் போலீஸ் காவலை ஜனவரி 5ஆம் தேதி வரை நீட்டித்து, டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையின் கோரிக்கையை ஏற்ற சிறப்பு நீதிபதி ஹர்தீப் கவுர், குற்றம் சாட்டப்பட்ட மனோரஞ்சன் டி, சாகர் சர்மா, அமோல் தன்ராஜ் ஷிண்டே மற்றும் நீலம் தேவி ஆகியோரின் காவலை நீட்டித்துள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குண்டு வெடித்த டிசம்பர் 13 ஆம் தேதியன்று, இரண்டு பேர் நாடாளுமன்றத்திற்குள் அத்திமீறி நுழைந்து பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
2nd card
வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் யார்?
சாகர் ஷர்மா மற்றும் மனோரஞ்சன் டி- மக்களவை பூஜ்ஜிய நேரத்தில் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து, எம்பிக்கள் இருக்கும் பகுதிக்கு குதித்து, குப்பிகளில் இருந்து மஞ்சள் வாயுவை வெளியேற்றி, கோஷங்களை எழுப்பியபடி சபாநாயகர் இருக்கை நோக்கி முன்னேறினார்.
இவர்கள் பின்னர் எம்பிகளால் தடுக்கப்பட்டு காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதே சமயத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியில் அமோல் ஷிண்டே மற்றும் நீலம் தேவி ஆகியோர் மஞ்சள் நிற புகையை வெளியேற்றி கோஷங்களை எழுப்பினர்.
இவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இவர்களுக்கு திட்டம் வகுத்து கொடுத்ததாக, லலித் ஜா, மற்றும் பொருட்கள் கொடுத்து உதவியதாக மகேஷ் குமாவத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.