பத்ம விருதுகள் 2023: தமிழகத்தில் விருது பெற்றவர்கள் பற்றிய விவரங்கள்
2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் இந்த ஆண்டிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து சாதனையாளர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு பெருமைப்படுத்தியுள்ளது. மொத்தமாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 26 பேருக்கு விருதுகளை அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்ற நபர்களின் பட்டியல் தமிழ்நாட்டில் கலைத்துறையினர், மருத்துவர், சமூக சேவை உள்ளிட்ட துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப்பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருதுகள் 2023: வெற்றியாளர்களின் பெயர் பட்டியல்
தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக சேவைக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாலம் கல்யாண சுந்தரத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு பழங்குடி இனத்தை சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் நளினி பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.