Page Loader
பத்ம விருதுகள் 2023: மேற்கு வங்கத்தை சேர்ந்த திலீப் மஹலனுக்கு பத்ம விபூஷன் விருது!
பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்ட மறைந்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸ்

பத்ம விருதுகள் 2023: மேற்கு வங்கத்தை சேர்ந்த திலீப் மஹலனுக்கு பத்ம விபூஷன் விருது!

எழுதியவர் Siranjeevi
Jan 25, 2023
10:40 pm

செய்தி முன்னோட்டம்

2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் இந்த ஆண்டிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு பெருமைப்படுத்தியுள்ளது. இவர்கள் மட்டுமின்றி பல்வேறு துறைகளைச் சேர்ந்த 91 பேருக்கு விருதுகளை அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், மேற்கு வங்கத்தை சேர்ந்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், மருத்துவ துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காகவும், இறப்புக்கு பிந்தைய பத்ம விருதாக இது வழங்கப்படுகிறது. மேலும், ஓஆர்எஸ் கரைசலை கண்டுபிடித்த இவர், உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

மருத்துவ உலகில் சாதனை படைத்த மறைந்த திலீப் மஹாலனாபிஸுக்கு பத்ம விபூஷன்