மும்பையில் 'INDIA' எதிர்க்கட்சி கூட்டணி கூட்டம் - பரபரப்பான விவாதம்
செய்தி முன்னோட்டம்
வரும் செப்டம்பர் 18 முதல் 22 வரை நடக்கவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்', பொது சிவில் சட்டம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் எதிர்க்கட்சிகள் கூட்டணியினை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
பாஜக'வின் இந்த நகர்வு குறித்து பேசியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் இந்த எதிர்க்கட்சி கூட்டத்தில், அதானி குழுமம் மீதான புகாரின் பேரில் பல புதிய ஆதாரங்களில் இருந்து கவனத்தினை திருப்பவே 'செய்தி சுழற்சி நிர்வகிக்கிறது. இது பிரதமர் மோடியின் பாணி' என்று கூறியுள்ளனர் என்று தெரிகிறது.
மேலும் இந்த நடவடிக்கை துரோகம் செய்தது என ராகுல் காந்தி குறிப்பிட்டு பேசியுள்ளார்.
விவாதம்
ஒற்றுமை முயற்சிகளை விரைவாக கண்காணிக்க வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர்கள்
அதனை தொடர்ந்து, எதிர்க்கட்சி கூட்டத்தில் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறி பரபரப்பான விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
ஒற்றுமை முயற்சிகளை விரைவாக கண்காணிக்க வேண்டும் என்றும் பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர் என கூறப்படுகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக'விற்கு எதிராக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றாக துவங்கிய கூட்டணி கட்சி 'INDIA'வின் 3வது கூட்டம் இன்று(செப்.,1)மும்பையில் நடந்தது.
இக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, சரத் பவார், நிதிஷ் குமார் உள்ளிட்ட 28 கட்சிகளை சேர்ந்த 63 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் பாஜகவை வீழ்த்துவது குறித்த வியூகம், எதிர்க்கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு குழு அமைத்தல், இலச்சினை லோகோ வெளியீடு உள்ளிட்டவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.