எதிர்க்கட்சி துணை தலைவரின் இருக்கை விவகாரம் - சபாநாயகரை சந்தித்து மனு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி கூடுகிறது என்று சபாநாயகர் மு.அப்பாவு அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவரின் இருக்கை விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இன்று(செப்.,22) சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
அதன்படி முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜு, செங்கோட்டையன், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட பலர் சபாநாயகர் அப்பாவுடனான இந்த சந்திப்பில் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
கோரிக்கை
"சபாநாயகர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது" - செங்கோட்டையன்
அந்த மனுவில், சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரின் இருக்கைகளை மாற்றியமைக்க வேண்டும்.
எதிர்க்கட்சி துணைத்தலைவரை மாற்றி, உதயகுமாரை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனு அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன், "எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் குறித்து இதோடு 3வது முறையாக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளோம். எங்களின் இந்த கோரிக்கை மனுவினை சபாநாயகர் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார்" என்று கூறினார்.
மேலும் அவர், "சபாநாயகர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது" என்றும் தெரிவித்தார்.