தமிழ்நாட்டினை தொடர்ந்து புதுவையிலும் விரைவில் ஆன்லைன் ரம்மிக்கு தடை
தமிழ்நாடு மாநிலத்தில் பல போராட்டங்களுக்கு பிறகு ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் புதுவை மாநிலத்திலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க போவதாக செய்திகள் தெரிவிக்கிறது. இந்த ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுக்களால் பொதுமக்கள் லட்சக்கணக்கில் தங்கள் பணத்தினை இழந்து வேறு வழி இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனால் அவர்களது குடும்பத்தினர் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் தற்போது புதுவையிலும் விரைவில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்படும் என்று அந்த மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஆன்லைன் சூதாட்டத்தினை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது. ஆன்லைன் ரம்மி தடைக்கான உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.