
பஞ்சாப் குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு: காவலர் ஒருவர் கொல்லப்பட்டார், 3 பேர் காயம்
செய்தி முன்னோட்டம்
பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள குருத்வாரா ஒன்றில், நிஹாங் சீக் பிரிவை சேர்ந்தவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், காவல்துறையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று
பேர் காயமடைந்துள்ளனர். முன்னதாக முறையின்றி, அந்த குருத்வாராவை நிஹாங் சீக் பிரிவினர் அக்கிரமித்துள்ளதாக கூறப்பட்டதை அடுத்து, நிஹாங் பிரிவைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, குருத்வாராவை கைப்பற்ற நேற்று காவல்துறையினர் குருத்வாராவிற்கு சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தினை தொடர்ந்து, நிஹாங் சீக் பிரிவை சேர்ந்த ஒருவர், போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
குறைந்தது 30 நிஹாங்குகள் இன்னும் குருத்வாராவிற்குள் பதுங்கி இருப்பதாகவும், தொடர்ந்து துப்பாக்கி சூடு நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
பஞ்சாப் குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு
Exchange of fire with Nihangas in Punjab’s Kapurthala
— mishikasingh (@mishika_singh) November 23, 2023
1 cop dead, 3 cops injured...
A group of Nihangas forcibly captured gurudwara and started firing when police asked to vacate
Police have cordoned the area and operation still underway
Firing still going on ...#Punjab… pic.twitter.com/1kEYAMSaWC