Page Loader
வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர்
ஆசிரியர் பாரத், குழந்தையை அடிக்கவே இல்லை என்று கூறியுள்ளார்.

வீடியோ: ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 7 வயது சிறுவனின் பெற்றோர்

எழுதியவர் Sindhuja SM
Mar 22, 2023
06:20 pm

செய்தி முன்னோட்டம்

தூத்துக்குடியில் ஆசிரியரை அடித்ததற்காக 7 வயது சிறுமியின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்குள் திடீரென்று நுழைந்த ஒரு சிறுமியின் பெற்றோர், அதே பள்ளியில் வேலை செய்யும் ஆர்.பாரத் என்ற ஆசிரியர் தங்கள் மகளை அடித்ததாக கூறி அந்த ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின், அவர்கள் திடீரென்று ஆசிரியர் பாரத்தை அடிக்க தொடங்கிவிட்டனர். இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆசிரியர் பாரத், குழந்தையை அடிக்கவே இல்லை என்று கூறியுள்ளார். இதற்காக சிறுமியின் தாய், தந்தை, தாத்தா ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

ஆசிரியர் தாக்கப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோ