முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும், பசியின்றி அவர்கள் ஆரோக்கியத்துடன் கல்வியை கற்கவும் 'காலை உணவுத் திட்டம்' ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது இத்திட்டத்தை 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவுபடுத்தி, அதன் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. அரசாணைப்படி, தந்தை பெரியாரின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி முதல், 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படும். பெருந்தலைவர் காமராஜரின் தியாகத்தைப் போற்றும் வகையில், இத்திட்டத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
TVK government issued an order renaming the Chief Minister's Breakfast Scheme, which provides morning meals to students studying in government and government-aided schools, as the Perunthalaivar Kamarajar Breakfast Scheme. pic.twitter.com/BXFEhZzgP6
— Vignesh Theni (@Vignesh_twitz) July 22, 2026
பயணம்
பள்ளி உணவு திட்டங்களின் வரலாற்றுப் பயணம்
கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்க 'மதிய உணவுத் திட்டத்தை' முதன்முதலில் அறிமுகப்படுத்தினார்.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் இத்திட்டத்தை மேலும் மேம்படுத்தி, முட்டை வழங்குதல், சத்துணவு மையங்களை நவீனப்படுத்துதல் என அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கொண்டு சென்றனர்.
2022-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை' தொடங்கி வைத்தார்.
தற்போது இந்த திட்டம் மேலும் விரிவப்படுத்தப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.