Page Loader
புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக 
இது தமிழகத்தின் வரலாற்றுமிக்க சின்னமாக இருப்பதால், இந்த முயற்சி தமிழக மக்களுக்கு சென்றடையும்.

புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக 

எழுதியவர் Sindhuja SM
May 25, 2023
01:36 pm

செய்தி முன்னோட்டம்

ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து, சிறப்புமிக்க தமிழகத்தின் செங்கோலை புதிய நாடாளுமன்றத்திற்குள் வைக்க இருக்கிறார். ஆகஸ்ட் 14, 1947அன்று இரவு 10.45 மணியளவில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த செங்கோலை தமிழகத்திலிருந்து பெற்றார். மேலும், பல மூத்த தலைவர்கள் முன்னிலையில், சுதந்திரம் கிடைத்ததற்கான அடையாளமாக இதை ஏற்றுக்கொண்டார். ஆங்கிலேயர்களிடமிருந்து இந்த நாட்டு மக்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதற்கான சின்னமாக இந்த செங்கோல் இருக்கிறது. இது தமிழகத்தின் வரலாற்றுமிக்க சின்னமாக இருப்பதால், இந்த முயற்சி தமிழக மக்களுக்கு சென்றடையும். 2024ஆம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் பாஜக தமிழகர்களின் ஆதரவை பெற இந்த செங்கோல் ஒரு படிக்கல்லாக அமையலாம்.

details

சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் செங்கோல் வைக்கப்படும்

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது, பிரதமர் மோடி, தமிழகத்தின் 24 ஆதீன தலைவர்களிடமிருந்து செங்கோலைப் பெறுவார். மேலும், அதிகாரத்தின் வரலாற்று சின்னமான இந்த செங்கோல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக தமிழ் வழிபாட்டு முறைகளை பின்பற்றி, தமிழ் சடங்குகளை செய்யும் சைவப் பிரிவுகளான ஆதீனங்களை பாஜக அணுகுவது இது முதல் முறை அல்ல. திமுக அரசு தங்களது பாரம்பரிய நடைமுறைகளைத் தடுப்பதாக குற்றம் சாட்டிய மதுரை மற்றும் தருமபுரி ஆதீனங்களின் கோரிக்கைகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக பாஜக ஆதரவு அளித்து வருகிறது. மேலும், பிரதமர் மோடி கடந்த சில மாதங்களாக, தமிழின் மகத்துவத்தை பற்றி மேடைகளில் பேசி வருகிறார்.