
கோயம்பத்தூர் வெள்ளையங்கிரி மலைப்பாதையில் ஏறிய முதியவர் ஒருவர் பலி
செய்தி முன்னோட்டம்
கோவை மாவட்டத்தில் உள்ள இந்த வெள்ளியங்கிரி மலை மிக ஆபத்தானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் இதில் தொடர்ந்து புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.
இமைய மலையில் இருக்கும் கயிலாய மலைக்கு செல்ல முடியாதவர்கள் இந்த மலைக்கு யாத்திரை சென்றால் கயிலாய மலைக்கு சென்ற பலனை பெறலாம் என சித்தர்கள் கூறியதாக வரலாறு தெரிவிக்கிறது.
இந்த கோயிலுக்கு சுமார் 50 கி.மீ., தூரம் நடைபயணம் கொண்ட புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் இந்த மலையை ஏறி சாமி தரிசனம் மேற்கொள்ள முயன்ற ஒருவர் பலியான சம்பவம் ஒன்று இன்று(மார்ச்.2) நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை கிராமத்தை சேர்ந்தவர் எம்.முருகன் என்பவர் வெள்ளையங்கிரி மலையை ஏறி சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.
வழுக்குப்பாறை பகுதி
திருநெல்வேலியை சேர்ந்த எம்.முருகன் மரணம்
அதன்படி இன்று(மார்ச்.2) அதிகாலை நேரத்தில் முருகன் மலையடிவாரத்தில் உள்ள பூண்டி கிராமத்தை அடைந்துள்ளார்.
அங்கிருந்து அவருடன் 10 பேர் இணைந்து வெள்ளையங்கிரி மலையினை ஏற துவங்கியுள்ளனர்.
ஏழு மலைகள் கொண்ட இந்த பாதையில் ஏழாவது மலை உச்சியில் தான் சிவபெருமான் சுயம்பு லிங்கத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
மலையேற துவங்கிய முருகனுக்கு உயரம் அதிகரிக்க அதிகரிக்க உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதனையடுத்து அவர் வழுக்குப்பாறை என்னும் பகுதியை அடைந்த நிலையில், அவர் உடல்நலம் மோசமான நிலையை அடைந்துள்ளது.
அங்கேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பகுதியில் உள்ள மக்கள் உதவியோடு வனத்துறையினர் உடலை மலையடிவாரத்திற்கு கொண்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.