Page Loader
விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 
விருதுநகர் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 

எழுதியவர் Nivetha P
Jul 02, 2023
05:31 pm

செய்தி முன்னோட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை அருகில் விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியிலுள்ள வைப்பாற்றின் கரையில் இருக்கும் வாழ்விடபகுதி தொல்லியல் மேடு என்று அழைக்கப்படுகிறது. 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இம்மேட்டு பகுதியில் கடந்த 2021ம்ஆண்டு முதல் அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது 3,500க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது இப்பகுதியில் 2ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் கடந்த 6 மாதங்களாக நடந்து வருகிறது. இதனையடுத்து, இப்பகுதியில் தற்போது அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அகல் விளக்குகள், கருப்பு-சிவப்பு நிறங்கள் கொண்ட சுடுமண்பானை ஓடுகள் உள்ளிட்ட ஏராளமான பழங்காலப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த 2ம் கட்ட அகழ்வாய்வு பணிகளை பொதுமக்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஆகியோர் ஆர்வத்தோடு கண்டு கழிக்கின்றனர் என்று தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

அகழாய்வு பணியில் கண்டெடுத்த பொருட்கள்