NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி

    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி

    எழுதியவர் Nivetha P
    Feb 22, 2023
    12:46 pm

    செய்தி முன்னோட்டம்

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கேதையறும்பு ஊராட்சிக்குட்பட்ட பழையபட்டியை சேர்ந்தவர் கன்னியப்பன்,

    இவருடைய மகள் கார்த்திகா ஜோதி(19), ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    கார்த்திகா ஜோதி அந்த கல்லூரியில் உள்ள விடுதியிலேயே தங்கி படித்துவந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் அவர் நேற்று(பிப்.,21) இரவு 9 மணியளவில் விடுதியின் மூன்றாம் மாடிக்கு சென்றுள்ளார்.

    அங்கிருந்து அவர் திடீரென கீழேகுதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

    படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை பார்த்து அதிர்ந்த சக மாணவிகள் விடுதி காப்பாளருக்கு தகவல் அளித்துள்ளார்கள்.

    இதனையடுத்து அங்குவந்த விடுதி காப்பாளர் மற்றும் கல்லூரி ஊழியர்கள் கார்த்திகாவை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள்.

    காவல் துறை

    மாணவி தற்கொலை முயற்சி குறித்து தீவிர விசாரணை

    அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் மாணவி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பாஸ்கரன், ஒட்டன்சத்திரம் மாஜிஸ்திரேட் செல்வி மகேஸ்வரி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

    அதே போல் கல்லூரி முதல்வர், விடுதி காப்பாளர், மாணவியின் பெற்றோர், சக மாணவிகள் என அனைவரிடமும் காவல் துறை தீவிர விசாரணையினை மேற்கொண்டுள்ளது.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திண்டுக்கல்
    காவல்துறை
    காவல்துறை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்

    திண்டுக்கல்

    கரூர் மாவட்ட குளித்தலை கபடி போட்டியில் பங்கேற்ற இளைஞர் திடீர் மரணம் - தமிழக முதல்வர் இரங்கல் தமிழ்நாடு
    ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா

    காவல்துறை

    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்

    தமிழ்நாடு

    வைரல் வீடியோ: ஓடும் ரயிலில் வட இந்தியர்களை தாக்கும் தமிழர் இந்தியா
    வானிலை அறிக்கை: பிப்ரவரி 17- பிப்ரவரி 21 வானிலை அறிக்கை
    திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பாலாலயம் - பந்தல்கால் நடும் விழா திருச்செந்தூர்
    'வேலை தருவதற்கு நாங்கள் தயார்' - தமிழ்நாடு வணிகர் சங்கத்தலைவர் விக்கிரமராஜா பேட்டி வணிக செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025