ஹரியானா வன்முறை எதிரொலி: காவல்துறை கண்காணிப்பாளர் பணியிடமாற்றம்
ஹரியானாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நுஹ் மாவட்டத்தில் ஜூலை 31 அன்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரையின் போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தின் தாக்கம் இன்று வரை நீடித்து வருகிறது. கலவரக்காரர்களால்,பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சில இடஙக்ளில் கடைகளும் வாகனங்களும் கொளுத்தப்பட்டது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, அரசை விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது. அதன் எதிரொலியாக, நூஹ் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர், ஐபிஎஸ் அதிகாரி வருண் சிங்லா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கலவரத்தின் போது, நூஹ் மாவட்டத்தின் SP வருண் சிங்லா விடுப்பில் இருந்ததால், நரேந்திர பிஜர்னியா ஆக்ட்டிங் SP -யாக செயல்பட்டு வந்தார்.
தீக்கிரையான கடைகளும், வழிபாடு தளங்களும்
தற்போது, நரேந்திர பிஜர்னியா நூஹ் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொள்வார் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது கடந்த சில நாட்களாக விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலத்தின் காரணமாக, நுஹ்வில் வெடித்த மோதலில் இரண்டு ஊர்க்காவல் படையினர் மற்றும் ஒரு மதகுரு உட்பட 6 பேர் உயிரிழந்தனர் . பல வாகனங்கள், உணவுக் கூடங்கள், கடைகள் மற்றும் மசூதிகள் ஆகியவை மதவாத கும்பலால் தீவைக்கப்பட்டன. இது குறித்து செவ்வாயன்று செய்தியாளர்கள்களிடம் பேசிய திரு பிஜர்னியா, கலவரம் செய்பவர்கள் பரப்பிய வதந்திகளே வன்முறைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார். அதன் தொடர்ச்சியாக தற்போது அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது