Loading...
தாராபுரம் இடைத்தேர்தல் விவகாரம்: நாதக வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் கோவையில் கைது
தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் கோவையில் கைது

தாராபுரம் இடைத்தேர்தல் விவகாரம்: நாதக வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் கோவையில் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Oct 20, 2026
12:36 pm

செய்தி முன்னோட்டம்

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது காவல்துறையினர் மீது வாக்குவாதம் செய்தல், சாலை மறியலில் ஈடுபடுதல் மற்றும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளரும், தாராபுரம் தொகுதி முன்னாள் வேட்பாளருமான கார்த்திகா மற்றும் அவரது கணவர் கோவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார். இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா போட்டியிட்டிருந்தார். தேர்தல் பிரசாரத்தின் போது அவர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இடைத்தேர்தல்

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசார மோதலும், வழக்குகளும்

தமிழக முதல்வர் விஜய் தாராபுரத்தில் பிரசாரம் செய்யவிருந்த அதே நாளில், நாதக வேட்பாளர் கார்த்திகா மற்றும் கட்சியினர் வீராச்சிமங்கலம் பகுதியில் பிரசாரம் செய்யச் சென்றபோது காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

காவல்துறையின் ஒருபட்ச செயல்பாட்டைக் கண்டித்து நாதகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.

முதல்வர் சென்ற பாதையில் பிரசாரம் செய்தது மற்றும் காவல்துறையின் பணிக்கு இடையூறு விளைவித்தது தொடர்பாக கார்த்திகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைது

கோவையில் அதிரடி கைது

வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கோவையில் வசித்து வந்த கார்த்திகா மற்றும் அவரது கணவரைத் தாராபுரம் காவல்துறையினர் நேற்று இரவு அவர்களது வீடு புகுந்து கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை கார்த்திகா, அவரது கணவர் உள்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த நிலையில், தற்போது நாதக வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT