நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 7ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்) பட்டங்களுக்கான நுழைவு தேர்வு நாடு முழுவதும் ஒரே முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான தேர்வு தேதியைத் தற்போது தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இது போக, JEE மெயின், கியூட்(CUET) மற்றும் ICAR AIEEA தேர்வுகளுக்கான அட்டவணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. JEE மெயின் என்பது பொறியியல் படிப்புகளுக்கான நுழைவு தேர்வு. கியூட்(CUET) என்பது 45 மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவு தேர்வு. ICAR AIEEA என்பது வேளாண் பல்கலைகளுக்கான நுழைவு தேர்வுகளாகும்.
தேர்வுகளின் விவரங்கள்:
நீட் தேர்வு 2023ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி நடைபெறும். JEE மெயின் முதல் கட்ட அமர்வு ஜனவரி 24 -31 வரை நடைபெறும். 26ஆம் தேதி தேர்வுகள் கிடையாது. JEE மெயின் இரண்டாம் கட்ட அமர்வு ஏப்ரல் 6, 8, 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும். JEE மெயின் தேர்வுகளுக்கு ஜனவரி 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். JEE மெயின் தேர்வுகள் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். கியூட்(CUET) தேர்வு மே 21-31 வரை நடைபெறும். ICAR AIEEA நுழைவு தேர்வு ஏப்ரல் 26-29 வரை நடைபெறும்.