
விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய நாட்டில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து தற்போது விமான படைக்கும் ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் சேர விரும்புவோர் இன்று(மார்ச்.,21) காலை 10 மணி முதல் agnipathvayu.cdac.in என்னும் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பத்திற்கு கடைசி நாள் மார்ச் 31ம் தேதி என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி பயிற்சி காலம் உட்பட நான்கு ஆண்டுகள் சேவை காலத்திற்கு விமானப்படை சட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்படுவார்கள்.
திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே IAFல் அக்னி வீரராக பதிவு செய்ய தகுதியுடையவர்கள் ஆவர்.
IAFல் நான்கு வருடங்கள் முழுவதும் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்களுக்கான அறிவிப்பு
விமான படையில் #அக்னி வீரராக சேர விருப்பம் உள்ளவர்கள் #மார்ச் 31-ம் தேதி வரை #பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு https://t.co/upCbH3RRQF
— Dinakaran (@DinakaranNews) March 21, 2023