Page Loader
மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை 
மல்யுத்த வீரர்கள், தங்களுடைய பதக்கங்களை கங்கை நதியில் வீச இருப்பதாக இன்று அறிவித்துள்ளனர்.

மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை 

எழுதியவர் Sindhuja SM
May 30, 2023
04:04 pm

செய்தி முன்னோட்டம்

பாஜக எம்பியும், நாட்டின் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங், பல பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு எதிராக நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர்கள், தங்களுடைய பதக்கங்களை கங்கை நதியில் வீச இருப்பதாக இன்று அறிவித்துள்ளனர். உத்தரகாண்டின் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் அவரகள் பதக்கங்களை வீசி எறிய இருக்கிறார்கள். மல்யுத்த வீரர்கள் ஏற்கனவே ஹரித்வாருக்கு கிளம்பிவிட்டனர். இன்று மாலை 6 மணிக்கு பதக்கங்களை கங்கையில் வீச திட்டமிட்டுள்ளனர். மேலும், அதன்பிறகு டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

details

பதக்கங்களை இழந்த பிறகு, எங்கள் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை: மல்யுத்த வீரர்கள்

பதக்கங்களை இழந்த பிறகு, "எங்கள் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை" என்றாலும், தொடர்ந்து தங்கள் சுயமரியாதையை சமரசம் செய்ய முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில், மல்யுத்த வீரர்களை தடுக்க மாட்டோம் என்று ஹரித்வார் போலீசார் தெரிவித்துள்ளனர். "எதையும் செய்ய மல்யுத்த வீரர்களுக்கு சுதந்திரம் உண்டு. அவர்கள் தங்கள் பதக்கங்களை புனித கங்கையில் வீச நினைத்தால், அவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம். என்னுடைய மூத்த அதிகாரிகளிடம் இருந்தும் எனக்கு அதுபோன்ற எந்த உத்தரவும் வரவில்லை." என்று ஹரித்வார் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் சிங் கூறியுள்ளார். WFI தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி மல்யுத்த வீரர்கள் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.