
'போருக்கான நேரம் இல்லை': உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தி
செய்தி முன்னோட்டம்
பிரதமர் நரேந்திர மோடி, தனது முக்கிய உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக, கொந்தளிப்பான பிராந்தியத்தில் இந்தியா அமைதியை ஆதரிப்பதாக கூறினார்.
மேலும், அவர் "இது போரின் சகாப்தம் அல்ல" என்றும் எந்த மோதலும் இராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.
போலந்து தலைநகர் வார்சாவில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பல தசாப்தங்களாக, அனைத்து நாடுகளிலிருந்தும் தூரத்தை பராமரிக்கும் கொள்கையை இந்தியா கொண்டிருந்தது என்றார்.
இருப்பினும், இன்றைய இந்தியாவின் கொள்கை, அனைத்து நாடுகளுடனும் நெருக்கமாக இருப்பதுதான் என்று அவர் மேலும் கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#PMModi addressed the members of Indian community after paying homage at the Monte Cassino Memorial and the Memorial to Kolhapur Family in Warsaw, #Poland.
— News18 (@CNNnews18) August 22, 2024
Read: https://t.co/Jq4TOTiRzM pic.twitter.com/c607x1nUVy
பிரதமர் மோடி
இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய பிரதமர்
"பச்சாதாபம் என்பது இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்றாகும். எந்த நாட்டிலும் எந்த பிரச்சனை வந்தாலும், முதலில் உதவி செய்யும் நாடு இந்தியாதான்...கோவிட் வந்தபோது, இந்தியா முதலில் மனிதநேயம் என்று சொன்னது...மற்ற நாடுகளின் குடிமக்களுக்கு இந்தியா உதவுகிறது" என்று போலாந்திலுள்ள இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார் மோடி.
"இந்தியா புத்தரின் பாரம்பரியத்தை நம்புகிறது, எனவே, போரை அல்ல, சமாதானத்தை நம்புகிறது...இந்தியா இந்தப் பிராந்தியத்தில் அமைதிக்கான ஆதரவாளராக உள்ளது, இது போருக்கான நேரம் அல்ல என்பது தெளிவாகிறது. சவால்களை எதிர்கொள்ள நாம் ஒன்றாக இருக்க வேண்டும். இந்தியா ராஜதந்திரம் மற்றும் உரையாடல்களில் கவனம் செலுத்துகிறது" என்று மோடி தனது போலந்து பயணத்தின் போது கூறினார்.
இது அவருடைய உக்ரைன் பயணத்திற்கு முன்னர் போர் சூழ்ந்த பிராந்தியத்திற்கான செய்தியாக பார்க்கப்படுகிறது.
உக்ரைன் பயணம்
போர் சூழ்ந்த தேசத்திற்கு பயணம் செய்யும் முதல் இந்திய பிரதமர்
1991ஆம் ஆண்டு உக்ரைன் சுதந்திரமடைந்த பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர், உக்ரைனுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் உக்ரைனுக்கு விஜயம் செய்விருக்கும் மோடி, தற்போது நடைபெற்று வரும் மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது குறித்து உக்ரைன் தலைவருடன் பகிர்ந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நட்பு நாடுகளின் விமர்சனத்தைத் தூண்டிய ரஷ்யாவுக்கான தனது உயர்மட்ட பயணத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட ஆறு வாரங்களுக்குப் பிறகு மோடி உக்ரைனுக்குச் செல்கிறார்.
பிரதமர் மோடியின் போலந்து பயணம் கடந்த 45 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் ஆகும்.