ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னையில் ஃபார்முலா- 4 கார் பந்தயம் நடத்த எந்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட்டாக நடத்தும் ஃபார்முலா-4 ஸ்ட்ரீட் கார் பந்தயம் கடந்த ஆண்டே சென்னையில் நடத்தப்பட இருந்தது. எனினும் புயல் மற்றும் மழை காரணமாக இந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு, வரும் ஆகஸ்ட்-31 மற்றும் செப்டம்பர்-1 ஆகிய தேதிகளில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில், இந்த கார் பந்தயத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில்,சென்னையில் ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது என உத்தரவிடப்பட்டுள்ளது.