NITI Aayog கூட்டத்தில் 100% அட்டெண்டன்ஸ்: அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்பு
செய்தி முன்னோட்டம்
புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 11-வது நிதி ஆயோக் ஆளும் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் புறக்கணிப்புகளால் சூழப்பட்டிருந்த நிதி ஆயோக் கூட்டங்களின் வரலாற்றில், இந்த ஆண்டு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகவும் முற்போக்கான மாற்றமாகவும் அமைந்துள்ளது. இம்முறை இந்தியாவின் அனைத்து 28 மாநிலங்களின் முதலமைச்சர்களும் இக்கூட்டத்தில் நேரில் கலந்துகொண்டு "கூட்டுறவு கூட்டாட்சி" தத்துவத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.
வரலாறு
கடந்த ஆண்டுகளின் புறக்கணிப்பு வரலாறு
கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த முறை 100% வருகை பதிவாகியுள்ளது. முந்தைய ஆண்டுகளின் நிலவரம்: 2025 (10-வது கூட்டம்): மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்), பினராயி விஜயன் (கேரளா), சித்தராமையா (கர்நாடகா) மற்றும் நிதிஷ் குமார் (பீகார்) ஆகிய 4 முக்கிய முதலமைச்சர்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனர். 2024: சுமார் 10 முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 2023: 9 முதலமைச்சர்கள் கூட்டத்தைத் தவிர்த்திருந்தனர்.
தனிப்பட்ட சந்திப்பு
பிரதமருடனான தனிப்பட்ட சந்திப்புகள்
நிதி ஆயோக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பிரதமர் மோடியைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினர். இதில் நான்கு மாநிலங்கள் எதிர்க்கட்சிகளின் வசம் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்புகளின் போது மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மத்திய அரசிடமிருந்து தேவையான நிதி ஆதாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Chief Minister of Tamil Nadu, Thiru @TVKVijayHQ met Prime Minister @narendramodi.@CMOTamilnadu pic.twitter.com/XlKevlTwv2
— PMO India (@PMOIndia) June 11, 2026