நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஹெத்தை அம்மன் திருவிழா நடைபெறவுள்ளதால் அதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வரும் டிச.27ம்.,தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். மேலும் இதனை ஈடுசெய்ய ஜனவரி. 6ம் தேதி பணி நாளாக செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஹெத்தை அம்மன் நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமாகும். இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் இங்கு விமர்சையாக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு இத்திருவிழா வரும் 27ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில் இத்திருவிழாவின் போது படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து, பாரம்பரிய பாடல்களுக்கு நடனமாடி தங்கள் குலதெய்வமான ஹெத்தை அம்மனை வழிபாடு செய்வார்கள். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள பேரகண்ணியில் இந்த பண்டிகை கொண்டாடப்படும்.