NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நீலகிரி வரையாடு திட்டம் - இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நீலகிரி வரையாடு திட்டம் - இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
    நீலகிரி வரையாடு திட்டம் - இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    நீலகிரி வரையாடு திட்டம் - இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

    எழுதியவர் Nivetha P
    Oct 12, 2023
    11:30 am

    செய்தி முன்னோட்டம்

    அழிந்து வரும் உயிரினமாக, இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது தமிழ்நாடு விலங்கான நீலகிரி வரையாடு.

    இதன் காரணமாக இந்த இனத்தினை பாதுகாக்கவும், அதன் இருப்பிடத்தினை மேம்படுத்தவும் தமிழக அரசு ஓர் திட்டத்தினை அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

    அதன்படி, நாட்டிலேயே முதன்முறையாக ரூ.25.14 கோடி மதிப்பிலான நீலகிரி வரையாடு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்று அறிவிப்புகள் வெளியானது.

    இந்த திட்டத்தின் படி, ஆண்டுக்கு 2 முறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, நோய்களை கண்டறிந்து சிகிச்சையளித்தல், டெலிமெட்ரிக் ரேடியோ காலரிங் பொருத்தி வரையாட்டினை பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    திட்டம் 

    'நீலகிரி வரையாடு திட்டம்' தலைமை செயலகத்தில் துவக்கி வைக்கப்படுகிறது 

    மேலும் இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்.,7ம் தேதி 'வரையாடு தினம்' என்று அனுசரிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துதலுக்கான ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று(அக்.,12) வனத்துறை சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த வரையாடு திட்டத்தினை துவக்கி வைக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    இதனிடையே மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், 'டாக்டர்.ஈ.ஆர்.சி. டேவிதாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்.,7ம் தேதி நீலகிரி வரையாடு தினமாக அர்பணிக்கிறோம்' என்று பதிவு செய்துள்ளார்.

    டாக்டர்.ஈ.ஆர்.சி. டேவிதார் 1975ம் ஆண்டே நீலகிரி வரையாடு குறித்த ஆய்வினை மேற்கொண்ட முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    வனத்துறை
    இயற்கை
    நீலகிரி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மு.க ஸ்டாலின்

    மோடியை அதிபராக்குவதற்கான சதி திட்டம் தான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' - மு.க.ஸ்டாலின் பிரதமர்
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 'இந்தியாவுக்காக பேசுகிறேன்' பாட்காஸ்ட் தொடரினால் ஏற்பட்ட சர்ச்சை  தமிழ்நாடு
    பட்டியலின பெண் பள்ளியில் காலை உணவை சமைக்க எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை தமிழ்நாடு
    ஜி20 மாநாடு விருந்தில் பங்கேற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜி20 மாநாடு

    வனத்துறை

    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  தமிழ்நாடு
    சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி விருதுநகர்
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது அரிக்கொம்பன் யானை! தமிழ்நாடு
    அரிக்கொம்பன் யானை, களகாடு வனப்பகுதிக்கு அழைத்து செல்லப்படுகிறது  இந்தியா

    இயற்கை

    லியோ ட்ரெய்லரும் ரசிகர்களின் பொறுப்பின்மையும் நடிகர் விஜய்

    நீலகிரி

    நீலகிரி: நீட் தேர்வை வென்ற முதல் பழங்குடியின மாணவி  நீட் தேர்வு
    'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்திற்கு விருது வழங்கினார் பிரிட்டன் மன்னர்  ஆஸ்கார் விருது
    கனமழை காரணமாக நீலகிரி, வால்பாறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கல்லூரி
    தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் - பொம்மன்,பெள்ளி தம்பதியை பாராட்டிய குடியரசுத்தலைவர்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025