Page Loader
இந்தியாவின் 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை 
இந்தியாவின் 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

இந்தியாவின் 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை 

எழுதியவர் Nivetha P
May 17, 2023
06:24 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பல பிரிவினைவாத அமைப்புகள் உள்ளது. அதில் ஒன்று தான் எஸ்.எப்.ஜே., இந்த அமைப்பானது பல்வேறு சட்டவிரோத செயல்களில் செயல்பட்டு வந்ததால், மத்திய அரசு இந்த அமைப்பினை தடை செய்தது. இந்த அமைப்பின் தலைவர் குர்பத் சிங், இவருக்கு நெருக்கமானவர் ஜஸ்விந்தர் சிங் முல்தானி. கடந்த ஆண்டு சண்டிகர் பகுதியில் உள்ள மாடல் புரைல் ஜெயில் அருகே நடந்த குண்டுவெடிப்புக்கும் இவனுக்கும் தொடர்புண்டு. மேலும் லூதியானா நீதிமன்றத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலும் மூளையாக இவன் செயல்பட்டுள்ளான் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்ட பொழுது விவசாயிகள் தலைவர் பல்வீர் சிங்கை கொல்லவும் இவன் சதி திட்டம் தீட்டியுள்ளான் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சோதனை 

பயங்கரவாதத்தில் ஈடுபட்டது, போதைப்பொருள் கடத்தல் போன்ற 5 வழக்குகள் பதிவு

இந்நிலையில் ஜஸ்விந்தர் சிங்கை ஜெர்மனியில் கைது செய்த நிலையில், அவன் மீது பயங்கரவாதத்தில் ஈடுபட்டது, போதைப்பொருள் கடத்தல் போன்ற 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜஸ்விந்தர் சிங்கின் கூட்டாளிகள் வீடுகளிலும் தற்போது என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் 100 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தங்கள் சோதனையினை மேற்கொண்டனர். தொடர்ந்து தற்போது வரை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.