Loading...
பல்கலைக்கழக வளாகத்திலும் ஆரவல்லி மலையிலும் வெடிகுண்டு சோதனை நடத்திய அல்-ஃபலா மருத்துவர்கள்: டெல்லி செங்கோட்டை NIA விசாரணையில் அம்பலம்
NIA தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன

பல்கலைக்கழக வளாகத்திலும் ஆரவல்லி மலையிலும் வெடிகுண்டு சோதனை நடத்திய அல்-ஃபலா மருத்துவர்கள்: டெல்லி செங்கோட்டை NIA விசாரணையில் அம்பலம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 11, 2026
11:45 am

செய்தி முன்னோட்டம்

கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே 15 பேரின் உயிரை பறித்த தற்கொலைப்படை தாக்குதல் வழக்கில், தேசிய புலனாய்வு முகமை (NIA) தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூன்று மருத்துவர்கள் உட்பட White-Coat பயங்கரவாத குழுவினர் இத்தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக NIA தெரிவித்துள்ளது.

தகவல்கள்

NIA குற்றப்பத்திரிகையின் முக்கியத் தகவல்கள்

மருத்துவர் உமர் உன் நபி, மருத்துவர் முசம்மில் ஷகீல் கணாய் மற்றும் ஜாசீர் பிலால் வானி ஆகியோர் அல்-ஃபலா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு குழாய் கிணறு அருகே முதற்கட்டமாக நைட்ரோ-கிளிசரின் வெடிமருந்தை சோதித்து பார்த்துள்ளனர்.

வளாகத்தைத் தொடர்ந்து, ஃபரிதாபாத் பகுதியில் உள்ள திறந்தவெளிகளிலும், அதைத் தொடர்ந்து ஆரவல்லி மலைக்காடுகளின் தனிமைப்படுத்தப்பட்ட 'தவுஜ்' வனப்பகுதியிலும் TATP வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சோதனை வெடிப்புகளை நடத்தியுள்ளனர்.

சோதனைகளுக்கு பயன்படுத்தப்பட்ட குழாய் போன்ற சாதனத்தின் எச்சங்களை மருத்துவர் கணாயின் வழிகாட்டுதலின் பேரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

உரங்கள் சார்ந்த வெடிமருந்துகளிலிருந்து தொடங்கி, சக்திவாய்ந்த ஐ.இ.டி (IED) குண்டுகளைத் தயாரிக்கும் நிலைக்கு இந்த மருத்துவர்கள் குழு அடுத்தடுத்து முன்னேறியுள்ளது NIA விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT