LOADING...
புதிதாக திறக்கப்பட்ட சென்னை வொண்டர்லா தீம் பார்க்கில் கோளாறு: வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டது பூங்கா நிர்வாகம்
புதிதாக திறக்கப்பட்ட சென்னை வொண்டர்லா தீம் பார்க்கில் கோளாறு

புதிதாக திறக்கப்பட்ட சென்னை வொண்டர்லா தீம் பார்க்கில் கோளாறு: வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டது பூங்கா நிர்வாகம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 03, 2025
02:04 pm

செய்தி முன்னோட்டம்

சென்னைக்கு அருகில் உள்ள திருப்போரூரில் சமீபத்தில் திறக்கப்பட்ட பிரபல Wonderla பொழுதுபோக்கு பூங்காவில், பல சவாரிகள் மற்றும் ராட்டினங்கள் முறையாக இயங்காததால், டிக்கெட் எடுத்து வந்த வாடிக்கையாளர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். வார விடுமுறை நாட்களில் ஆர்வத்துடன் குடும்பத்துடன் வந்திருந்த வாடிக்கையாளர்கள், முக்கியமான பல வாட்டர் ரைடுகளும் மற்றும் சாகச ராட்டினங்களும் எதிர்பாராத விதமாக செயல்படாமல் இருந்ததை கண்டு அதிருப்தி தெரிவித்தனர். புதியதாகத் திறக்கப்பட்ட பூங்காவில், அடிப்படைப் பராமரிப்புப் பணிகள் முறையாகச் செய்யப்படவில்லை என்றும், சவாரிகள் அடிக்கடி பாதியிலேயே நின்றுவிடுவதாகவும் புகார்கள் எழுந்தன. குறைவான சவாரிகள் மட்டுமே இயங்கியபோதிலும், முழுமையான கட்டணம் வசூலிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் தங்கள் அதிருப்தியையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தினர். இது தொடர்பாக பூங்கா நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பதில்

பூங்கா நிர்வாகத்தின் பதில்

Wonderla நிறுவனத்தின் நிர்வாகி அருண் தனது X பக்கத்தில் இந்த நிகழ்வு குறித்து வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். வாடிக்கையாளர்களின் அதிருப்திக்குப் பூங்கா நிர்வாகம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும், பராமரிப்புக் குறைபாடுகள் குறித்து பூங்கா நிர்வாகம் சார்பாகவும் மன்னிப்பு கோரினார். சேதமடைந்த அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட ராட்டினங்கள் மற்றும் சவாரிகளைச் சரிசெய்வதற்கான பழுது நீக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் அனைத்து சவாரிகளும் முழுமையாகச் செயல்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். மேலும், இணையத்தில் வெளியான செய்திகள் சில தேவையற்ற வதந்திகளை பரப்புவதாகவும், பல ஆண்டுகள் இந்த தொழில் இருக்கும் Wonderla நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே முக்கியமானது எனவும் அவர் கோடிட்டு காட்டினார்.

Advertisement