
கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தில் லிஃப்ட்: சுற்றலா பயணிகள் மகிழ்ச்சி
செய்தி முன்னோட்டம்
கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்திற்கு லிஃப்ட் அமைக்கும் பணி கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கன்னியாகுமாரி கலங்கரை விளக்கத்தின் மீது ஏறி நின்று பார்த்தால், வங்க கடல் மற்றும் அரபிக் கடல் இந்திய பெருங்கடலுடன் சேர்வதைத் தெளிவாக பார்க்கலாம்.
ஆனால், கலங்கரை விளக்கத்திற்கு மேல் ஏறுவது மிகவும் சிரமமாக இருப்பதால் இங்கு அதிகம் யாரும் செல்வதில்லை.
ஆகவே, கலங்கரை விளக்கத்திற்கு மேல் செல்வதற்காக ரூ.1 கோடியே 85 லட்சம் செலவில் கண்ணாடியால் ஆன லிஃப்ட் கட்டப்பட்டிருக்கிறது.
இன்றிலிருந்து(ஜன:13) இந்த லிஃப்ட் பயன்பாட்டிற்கு வருகிறது.
மேலும், இந்த கலங்கரை விளக்கத்தில் சுற்றுலா பயணிகளுக்காக ஒரு கேலரியும் அமைக்கப்பட்டுள்ளது.
கலங்கரை விளக்கம்
லிஃப்ட்: நேரம் மற்றும் கட்டணம்
நேரம்:
திங்கள் முதல் வெள்ளி வரை- மாலை 3- மாலை 5.30
சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்- காலை 10- மாலை 5.30
கட்டணம்:
பெரியவர்கள்- 10 ரூபாய்
சிறியவர்கள்- 5 ரூபாய்
கேமரா அனுமதிக்கு- 20 ரூபாய்
இனி, முக்கடல் சேர்வதை உயரத்தில் இருந்து மிக தெளிவாக பார்க்காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இந்த தகவல் அனைத்தையும் கலங்கரை விளக்க இயக்குநர்(சென்னை மண்டலம்) கார்த்திக் செஞ்சுடர் உத்தரவின்படி கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தில் வேலை பார்க்கும் அலுவலர் பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.