தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம்
தமிழகத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், நெய்வேலி, மற்றும் வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய விமான நிலையம் அமையவுள்ளது என்று மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் படி, மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள இந்த 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழகத்தை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டால் அந்த மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.