Page Loader
நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை
நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை

நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை

எழுதியவர் Nivetha P
Mar 21, 2023
06:19 pm

செய்தி முன்னோட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். எனினும், அத்தேதியில் நடைபெறவுள்ள 10, 11,12ம் வகுப்பு பொது தேர்வுகள் எந்த தடையும் இன்றி நடைபெறும். பொது தேர்வு நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் அவர் கூறியுள்ளார். அதே போல் இந்த விடுமுறை வங்கிகளுக்கும் பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார் நிலைக்கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் தொடர்பாக அவசர பணிகளை கவனிக்க செயல்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் விவரமாக தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

நெல்லைக்கு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு