
நாடு முழுவதும் நீட் தேர்வு மே 07 இல் நடக்கிறது! முன் ஏற்பாடுகள் தீவிரம்
செய்தி முன்னோட்டம்
இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு சேர நீட் தேர்வானது நடத்தப்படுகிறது.
இதில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு தனித் தனியாக நீட் தேர்வு நடைபெறுகிறது.
இதனிடையே, இளங்கலை படிப்பிற்கான நீட் தேர்வு மே 07 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 2 மணியளவில் தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது.
நீட் தேர்வை நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் அதிகமான மாண மாணவிகள் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் மட்டுமே சுமார் 1½ லட்சம் பேர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் நீட் தேர்வு ஆங்கிலம், தமிழ், இந்தி, கன்னடம் என 13 மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
நீட் தேர்வு
இந்தியா முழுவதும் நீட் தேர்வு 7 ஆம் தேதி நடக்கிறது!
இதற்கான ஹால் டிக்கெட்டுகளையும் தேசிய தேர்வு முகாம் வெளியிட்டுள்ளது. இதனை இணைய வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், நீட் தேர்வுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுகளும் செய்து வருகின்றனர்.
பதிவிறக்கம் செய்வது எப்படி ?
1. neet.nta.nic.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
2. முகப்புப் பக்கத்தில் "Download Admit Card for NEET (UG)- 2023 is Live Now" என்பதை கிளிக் செய்யவும்.
3. அதில், உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி, பின் எண் உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து சமர்ப்பிக்கவும்.
4. திரையில் உங்களது நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு தோன்றும்.
5. அதனை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.