NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் நீரா பானம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் நீரா பானம்
    அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் நீரா பானம்

    அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் நீரா பானம்

    எழுதியவர் Nivetha P
    Apr 05, 2023
    07:20 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தினை தலைமையிடமாக கொண்டு உலக தென்னை உழவர் உற்பத்தி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தின் பணி என்னவென்றால் 1200க்கும் மேற்பட்ட விவசாயிகளை பங்குதாரராக கொண்டு தென்னை மரங்களில் இருந்து நீரா பானத்தினை உற்பத்தி செய்து அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே ஆகும்.

    சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த நீரா பானம், பல்வேறு வைட்டமின்கள், இரும்பு மற்றும் தாதுக்கள் நிறைந்ததாகும்.

    இது இ-காமர்ஸ் முறையிலும் விற்பனை செய்யப்டுகிறது.

    இந்நிலையில் நீரா பானத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம்

    தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலோங்கும்

    இதுகுறித்து நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம், அமெரிக்காவில் உள்ள தமிழகத்தை சேர்ந்த கதிர்குருசாமி என்பவர் மூலம் ரீஜெண்ட் நார்த் அமெரிக்க நிறுவனம் நீரா பானத்திற்கான ஆர்டரினை கொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இதனால் தற்போது தினசரி 5000 பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யும் நிலையில், அதனை உயர்த்தி இனி 20,000 ஆயிரம் பாக்கெட்டுகளாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி ரூ.30 லட்சம் மதிப்புள்ள நீரா பானம் அமெரிக்காவிற்கு கண்டைனர் மூலம் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

    இதன் ஆண்டு விற்பனை ரூ .25 கோடி ரூபாயை எட்டுவதற்கான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வரும் நாட்களில் நீரா பானத்தினை 5 கண்டைனர்களில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன் விற்பனை அதிகரித்தால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேலோங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை
    அமெரிக்கா
    திருப்பூர்

    சமீபத்திய

    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா

    தமிழ்நாடு

    வேங்கைவயல் விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு வேங்கை வயல்
    இஸ்லாமிய பெண்களின் பர்தாவை கழற்ற சொல்லி வம்பிழுத்த 7 பேர் கைது காவல்துறை
    60 சவரன் இல்லையாம், இப்போது 200 ஆம்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதித்துள்ள புதிய புகார் ரஜினிகாந்த்
    சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - ஒன்றிய கலாச்சார அமைச்சகத்துக்கு மாணவர் அமைப்பு கடிதம் சென்னை

    சென்னை

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மஞ்சப்பை திட்டம் குறித்த அறிவிப்பு பட்ஜெட் 2023
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    சென்னையில் ஆவின் பால் கெட்டுப்போன விவகாரம் குறித்து அதிகாரிகள் விளக்கம் தமிழ்நாடு
    அதிரடியாக சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை

    அமெரிக்கா

    அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் நேருக்கு நேர் மோதிய ரஷ்ய ஜெட் விமானம் உலகம்
    எரிக் கார்செட்டியை இந்தியாவிற்கான அடுத்த அமெரிக்க தூதராக நியமிக்குமா அமெரிக்கா இந்தியா
    திருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு தமிழ்நாடு
    சிலிக்கான் வங்கி திவால்: வரலாறு காணாத சரிவை சந்திக்கும் சுவிஸ் வங்கி உலக செய்திகள்

    திருப்பூர்

    திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன் தமிழ்நாடு
    திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது காவல்துறை
    திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை சமூக வலைத்தளம்
    வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025