LOADING...
இந்தியா-கனடா மோதல்: பிரதமர் மோடியை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
பிரதமர் மோடியும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசுகின்றனர்.

இந்தியா-கனடா மோதல்: பிரதமர் மோடியை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

எழுதியவர் Sindhuja SM
Sep 20, 2023
12:38 pm

செய்தி முன்னோட்டம்

கனேடிய மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக கனடாவுக்கும் இந்தியாவுக்கும் மோதல்கள் நடந்து வரும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். காலிஸ்தான் பயங்கரவாதியை கனடாவில் வைத்து கொன்றதாக கூறி உயர்மட்ட இந்திய அதிகாரியை கனடா நேற்று வெளியேற்றியது. மேலும், இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறியிருந்தார். இது நடந்த சில மணிநேரங்களில், ஒரு முக்கிய கனட தூதரக அதிகாரியை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், இந்திய-கனட உறவுகள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடியும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசுகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

பிரதமர் மோடி-வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு