Page Loader
நாங்குநேரி சம்பவம்: மேலும் ஒரு சிறுவன் கைது, சாதிரீதியான கயிறுகளுக்கு எதிராக நடவடிக்கை 
கோபமடைந்த 3 மாணவர்கள், சின்னத்துரையின் வீடு புகுந்து அவரை அரிவாளால் வெட்டினர்.

நாங்குநேரி சம்பவம்: மேலும் ஒரு சிறுவன் கைது, சாதிரீதியான கயிறுகளுக்கு எதிராக நடவடிக்கை 

எழுதியவர் Sindhuja SM
Aug 12, 2023
10:50 am

செய்தி முன்னோட்டம்

நெல்லை: நாங்குநேரியில் ஒரு பிளஸ் 2 மாணவர் மற்றும் அவரது தங்கையை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாங்குநேரியை சேர்ந்த சின்னத்துரை என்ற மாணவர் வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவருகிறார். சின்னத்துரை பட்டியலின மாணவர் என்பதால் அவருடன் பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் அவரை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் பள்ளியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில், காவல்துறையினர் தொடர்புடைய மாணவர்களை அழைத்து கண்டித்ததாகவும் தெரிகிறது. இதனால், கோபமடைந்த 3 மாணவர்கள், சின்னத்துரையின் வீடு புகுந்து அவரை அரிவாளால் வெட்டினர். அதை தடுக்க வந்த அவரது தாயை எட்டி உதைத்து விட்டு, சின்னத்துரையின் தங்கையையும் அரிவாளால் வெட்டினர்.

கோகிவ்

அறிக்கை சமர்ப்பிக்க பள்ளி தலைமை ஆசிரியருக்கு உத்தரவு 

இந்த சம்பவத்தை பார்த்த சின்னத்துரையின் தாத்தா அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 2 சிறார் உட்பட 6 பேரை நேற்று கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது இந்த வழக்கில் மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து நன்கு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சின்னத்துரையில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் கையில் அணியும் சாதி ரீதியான கயிறுகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.