8 வருடத்திற்கு முன் 29 பேருடன் மாயமாகிய விமானத்தின் மிச்சங்கள் சென்னை கடற் பகுதியில் கண்டுபிடிப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னை கடற் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தின் மிச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டு வங்காள விரிகுடாவில் காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏஎன்-32 போக்குவரத்து விமானத்தின் மிச்சங்களாக இது இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஒரு ஆபரேஷன் பணியின் போது காணாமல் போன அந்த விமானத்தில் இருபத்தி ஒன்பது பணியாளர்கள் இருந்தனர்.
அந்த விமானம் காணாமல் போனதும் அதை கண்டறிய தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தன்னிச்சையாக இயங்கும் பயன்பாட்டு வாகனம்(AUV) ஆழ்கடல் ஆய்வுக்காக ஏவப்பட்டது.
மல்டி-பீம் சோனார் (ஒலி மற்றும் ஊடுருவல் ரேஞ்சிங்), செயற்கை துளை சோனார் மற்றும் உயர் தெளிவுத்திறன் புகைப்படம் ஆகியவற்றைப் பயன்படுத்தி 3,400 மீட்டர் ஆழத்தில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
பிக்
ஆழ்கடல் தேடலின் கண்டுபிடிப்புகள்
இந்நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து 310 கிலோமீட்டர் தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் குப்பைகளை பேலோடுகள் அடையாளம் கண்டுள்ளன.
தேடுதல் பனியின் போது கிடைத்த புகைப்படங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு என்றும், அது An-32 விமானத்துடன் ஒத்துப்போகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த இடத்திலோ அல்லது அந்தப் பகுதியிலோ வேறு எந்த விமானமும் விபத்துக்குள்ளாகவில்லை என்பதால் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் மிச்சங்கள் An-32 விமானத்துடையதாக தான் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், கண்டுபிடிக்கப்பட்ட மிச்சங்கள் விபத்துக்குள்ளான An-32 விமானத்திற்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று நம்புகிறது.