NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் மனித விரல்; மும்பை பெண் எதிர்கொண்ட பயங்கர சம்பவம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் மனித விரல்; மும்பை பெண் எதிர்கொண்ட பயங்கர சம்பவம்

    ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் மனித விரல்; மும்பை பெண் எதிர்கொண்ட பயங்கர சம்பவம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 13, 2024
    02:36 pm

    செய்தி முன்னோட்டம்

    மும்பையின் மலாடில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் கோனில் மனித விரல் இருந்ததை பார்த்து ஷாக் ஆகியுள்ளார் ஒரு பெண்.

    அவரது சகோதரர் ஓர்லெம் பிரெண்டன் செராவோவுக்காக, யம்மோ ஐஸ்கிரீம் என்ற நிறுவனத்திடமிருந்து ஆர்டர் செய்துள்ளார்.

    27 வயதான மருத்துவரான செர்ராவ் அவரது பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீமை பாதி சாப்பிட்டு கொண்டிருக்கும்போது தான் இந்த விரலைக் கண்டுபிடித்தார்.

    விசாரணை

    ஐஸ்கிரீம் நிறுவனத்திடம் போலீசார் விசாரணை 

    இந்த சம்பவம் குறித்து அந்த பெண் உடனடியாக மலாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    யம்மோ ஐஸ்கிரீம் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விஷயத்தை அவர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட இடம் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் மூத்த போலீஸ் அதிகாரி உறுதிப்படுத்தினார்.

    தடயவியல் பகுப்பாய்வு

    தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மனித உறுப்பு

    ஐஸ்கிரீமில் கண்டெடுக்கப்பட்ட மனித விரல் பரிசோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (FSL) அனுப்பப்பட்டுள்ளதாக மலாட் காவல்துறை தெரிவித்துள்ளது.

    ஐஸ்கிரீம் கோனின் புகைப்படத்தில், மனித விரலை மேலே இருந்து நீட்டிக் கொண்டிருப்பது தெரிகிறது.

    இந்த புகைப்படம் ஆன்லைனில் பகிரப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே உணவு பாதுகாப்பு தரங்கள் குறித்து கவலையை கிளப்பியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    மும்பை

    ராணுவ தளங்கள் மற்றும் இரண்டு முக்கிய நகரங்கள் மீது நடத்தப்பட இருந்த IS தாக்குதல் முறியடிப்பு தீவிரவாதம்
    26/11 15வது ஆண்டு நினைவு நாளில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் அஞ்சலி பயங்கரவாதம்
    மார்க் ஆண்டனி பட விவகாரம்: மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர் விஷால்
    பாலிவுட்டின் 'பெஸ்ட் ஃப்ரெண்ட்' ஓர்ஹான் அவத்ரமணி; யார் அந்த மர்ம மனிதர்?  பாலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025