LOADING...
மும்பை மெட்ரோவில் தொழில்நுட்பக் கோளாறு: ரயில் சேவைகளில் தாமதம்
மும்பை மெட்ரோவில் தொழில்நுட்பக் கோளாறு

மும்பை மெட்ரோவில் தொழில்நுட்பக் கோளாறு: ரயில் சேவைகளில் தாமதம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 07, 2025
08:10 pm

செய்தி முன்னோட்டம்

மும்பை மெட்ரோவின் வழித்தடங்கள் 2A மற்றும் 7 ஆகியவற்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஏற்பட்ட தற்காலிகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயங்குவதாகவும், பல நிலையங்களில் பயணிகள் அதிக அளவில் திரண்டு கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் மும்பை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சீரமைப்பு

அவசர சீரமைப்புப் பணிகள்

சேவை தாமதமடைவது குறித்துப் பயணிகளுக்கு அறிவிக்கை வெளியிட்ட மும்பை மெட்ரோ நிர்வாகம், பயணத்தைத் திட்டமிடும்போது தாமதத்தை மனதில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்ட மும்பை மெட்ரோ, "ஒரு தற்காலிகத் தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக, வழித்தடங்கள் 2A மற்றும் 7-இல் சேவைகள் தாமதமாக இயங்குகின்றன. இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம், உங்களின் பொறுமைக்கு நன்றி. இயல்பு நிலையை விரைவில் மீட்டெடுக்க எங்கள் குழுக்கள் முழு வேகத்தில் பணியாற்றி வருகின்றன." என்று தெரிவித்தது. இந்தத் தாமதத்தால் மாலை நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனினும், தொழில்நுட்பக் குழுக்கள் விரைவாகச் செயல்பட்டு, பாதிப்படைந்த வழித்தடங்களில் ரயில் சேவைகளை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement